
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தில் உண்மை இருக்குமானால் வாக்கிலும் அதன் ஒளி நிறைந்திருக்கும்.
* இளம் வயதில் மனதில் எழும் கருத்துக்கு வலிமை அதிகம். அதை எளிதில் யாரும் மாற்ற முடியாது.
* கடவுளாகிய மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் அனைத்தும் அதன் வடிவங்களே.
* உடல் நம் வசப்பட்டால், இந்த உலக வாழ்வே இன்பமாக மாறி விடும்.
* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிகிறது. அதைப் பெறும் விதத்தில் மனதை திறந்து வையுங்கள்.
* துன்பப்படுவோரிடம் கருணை காட்டுங்கள்.
- பாரதியார்